டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
ராணுவ வீரர்கள் நாட்டின் வெளிப்புறத்தை பாதுகாக்கின்றனர். 24 மணி நேரம் பனிமலை, பாலைவனம், நடுக்கடல் விழிப்புடன் பணி செய்கின்றனர். பணி இடம் அருகே குடிலை, இருப்பை அமைத்துக் கொள்கின்றனர். ஆறுகோடி தமிழர்களின் நிர்வாகத்தை அரசு ஊழியம் உள்நாட்டில் பொறுப்பேற்கிறது. பத்து லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களை நம்பி அரசு பட்ஜெட் பணத்தை ஒப்படைக்கிறது. 60 தமிழர்களுக்கு ஒரு அரசு ஊழியர் நியமனமாகிறார். அமைச்சர்கள் பதவி இலாகா துறைமாற்றப்படுகிறது. வன இலாகா மந்திரி திடீரென்று ஒரு நாளில் தகவல் தொழிநுட்ப அமைச்சராகிறார். பிற்பட்டோர் மந்திரி மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கிறார். பெட்ரோல் அமைச்சர் நள்ளிரவில் பஞ்சாயத்து துறையில் அமர்த்தப்படுகிறார். அமைச்சர் பதவிக்கும் பல்கலைக்கழகப் பட்டத்துக்கும் துறை நிபுணத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அரசு ஊழியம் என்பது மட்டுமே இங்கு அடிப்படை விதி. பொதுநலன் இறுதி எதிர்பார்ப்பு. அரசு ஊழியர் துறை இலாகா மாற்றப்பட வேண்டும். குத்தகை, உரிமையாளர், ஓனர் போல சீட்டை ஆக்கிரமிக்கக்கூடாது. எத்தகைய பொது அறிவும் இல்லாமல் ஒருவர் அரசு ஊழியராகிறார். புற்றீசல் போல பெருகியுள்ள, ஏதேனும் ஒரு மரத்தடி கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு தேவை. அவ்வளவுதான். கோடி ரூபாய் அதிகாரம், அரசு நிர்வாகம், பணம் இவரிடம் தஞ்சம்.60 தமிழர்களின் சாலை, கல்வி, போக்குவரத்து, சாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், உணவு பங்கீடு, குடிநீர் வரி, நிலவரி, கட்டிட அனுமதி, வணிக ஒப்புதல் கடன், கடை பெர்மிட் அனைத்தும் ஒரு அரசு ஊழியர் காலடியில். ஒவ்வொரு தமிழரும் மண்டியிட்டு பிச்சை கேட்டு, மடியேற்றி, சரிசெய்து, நன்கு கவனித்து, எப்படியாவது குஷிப்படுத்தி, திருப்தி செய்து தமது வாழ்வியல் நலன்களுக்கு அரசு ஊழியரிடம் காவடி தூக்க வேண்டும். துறையில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி, செலவழிக்கப்பட்ட தொகை, அமைச்சர் பெயர், முதன்மை செயலாளர் பெயர், பட்டம், கல்வி தகுதி, திறன், சுற்றுப்பயண விவரம் எதுவும் ஓர் அரசு ஊழியருக்கு தெரியாது. தெரிய வேண்டிய, எவ்வித அவசியமில்லை. 30 நாட்கள் ஓடினால் முழுசம்பளம். தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றனர். கோப்புகளை பந்தாடும் தகுதி, காலம் கடத்தும் திறமை மட்டும் அரசு ஊழியருக்கு போதுமானவை. பணி செய்யும் இடம், பகுதி அருகில் அரசு ஊழியர் வசிப்பதில்லை. தனது வீட்டுக்கருகே பணியிடம், அலுவலகம் கோறுகிறார். இதனால் அரசு நிதி பாழாகிறது. சில மாவட்டங்களில், தாலுகாக்களில் அளவுக்கதிகமாக அரசு ஊழியர்கள். இன்னும் சில மாவட்டங்களில் எதிர்மறை நிலை. அரசாங்கத்தின் பிடியில், காலடியில் பொதுமக்களின் கழுத்து சிக்கியிருப்பதால் தமிழர்களின் வாழ்வு தடுமாறுகிறது. அரசு ஊழியரின் கையெழுத்தை பெறாமல் ஒரு சான்றிதழையும் காணமுடியாது. வரவு தடுக்கப்படும். காரணமின்றி கோப்புகளை இழுத்தடிக்கும் அரசு ஊழியரை டிஸ்மிஸ் பணிரத்து செய்யவேண்டும். 8000 ரூபாய் மாதம் வைப்பு நிதி (நிறிதி) செலுத்தும் ஊழியரின் வீடுகளை ரெய்டு வரிசோதனை செய்யலாம். தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் வசதிகளை மட்டும் அனுபவிக்கும் அரசு ஊழியம் தொடர் கண்காணிப்புக்குள்ளாக வேண்டும்.
No comments:
Post a Comment