டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
இஸ்லாமியப் பிரச்சாரம் குர்ஆன், ஹதீஸ் மூலாதாரங்களின் விரிவு. அரபி மொழி தெரிந்தவர்கள் தமிழகத்தில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் தேறுவர். படிக்க, எழுத, மொழி பெயர்க்க ஆர்வம் குறைவு. குர்ஆன் அரபி மூலத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு விரிவுரை நடத்துவோர் ஆயிரம் பேர் எண்ணிக்கை அதிகமாகவே படுகிறது. தமிழகச் சூழலில் அரபி மொழி வளர்ச்சி வாய்ப்பு ஏதுமில்லை. ஐந்து லட்சம் முஸ்லிம்கள் அரபுலகத்தில் பத்தாண்டுகளுக்கும் அதிகமாக வாசம் செய்தாலும் அரபி மொழி பயிற்சிக்கு தமிழகத்தில் வித்திடவில்லை. தொழுகையில் அரபி வசனங்களை கிளிப்பிள்ளைத்தனமாக டேப்ரிக்கார்டர் பாணியில் ஓதுவதோடு அரபி மொழி தொடர்பு நின்றுவிடுகிறது. முப்பதாண்டு காலம் தொடர்ந்து குர்ஆன் விரிவுரை நேயர் பத்து வசனங்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய தயங்குவார். அகில இந்திய அளவில் உருதுமொழி இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு கை கொடுக்கிறது. மத்திய, மாநில அரசுகள் வெறித்தனமாக உருது மொழியை நசுக்க, அழிக்க போதிய முயற்சிகள், தொடர்ந்து மேற்கொண்ட பின்னரும் இறையருளால் உருது மொழி உயிருடன் வாழ்கிறது. இந்தி மொழி பிரச்சாரம், வளர்ச்சிக்கு செலவிடும் தொகையில் 5 சதவீதம் உருது மொழிக்கு அரசு நிறுவனங்களால் செலவிடப்படுவதில்லை. நெடுநாளைய நவாப், முகலாய ட்ரஸ்ட்கள் தனி நபர் கொள்ளையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் உருது மொழிக்கு நிதி திரட்ட இயலவில்லை.இஸ்லாமிய மத உயிரோட்டத்துக்கு உருது மொழி மிகவும் இன்றியமையாதது. அகில இந்தியப் பார்வையை உருதுமொழி ஏற்படுத்தும். மக்கா, மதீனா இணைப்பு அன்றைய நாளில் மத வளர்ச்சிக்கு உதவியது. அதே பாணியில் வடநாட்டு தூய மொழியாளர்கள் இறையச்ச வாதிகள் மற்றும் தமிழக மதவாதிகள் இணக்கம், தொடர்பு, வாழ்வியலை உயர்தளத்துக்கு, சிந்தனைக்கு ஏற்றும். உருது மொழியின் சிறந்த கவிதைகள், படைப்புகள், இலக்கிய வடிவங்கள் தமிழருக்கு அறிமுகமாக வேண்டும். உருது மொழியில் ஒருமணி நேரம் நடைபெறும் சொற்பொழிவு தமிழகச் சூழலில் முழு, ஒருநாள் மாநாட்டு உரைக்குச் சமம். உருது மொழி அழிக்கவே முடியாத அளவுக்கு செழுமையாய் தனக்குத்தானே வளர்ந்து கொண்டும் வளர்த்துக் கொண்டுமுள்ளது. உருது மொழிக்கு இந்து முஸ்லிம் அடையாளம், வித்தியாசமெல்லாம் தெரியாது. புரியாது. அனைவரையும் வசீகரித்துள்ளது. உருது மொழிக்கு மிகப்பெரிய விரோதிகளாக மேல்தட்டு, சிவப்பு தோல், பாரம்பரிய கான்ந்தானி முஸ்லிம் கும்பல் திகழ்கின்றனர். இதர மொழி முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதனால் இடைக்காலத்தில் உருது மொழிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது. 1965ல் தமிழகத்தில் வெறியூட்டப்பட்ட இந்தி எதிர்ப்பு, திசைமாறி உருது மொழியை காவு கொண்டது. ஆனால் இன்று திராவிட கட்சி, இயக்கம் மெல்ல மெல்ல ஆங்கில மோகத்தால் செத்து மடிகிறது. வாய்ப்பை பயன்படுத்தி, உருதுமொழி தமிழர் இணைப்புக்கு முஸ்லிம்கள் உதவிடவேண்டும். இதழியல், இஸ்லாமிய மத துறையில் பணிபுரிய விரும்புவோர் உருது மொழியை கற்கவேண்டும். வேறு வழியில்லை.
No comments:
Post a Comment