டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
இறைவனுக்கு உருவமில்லை. இஸ்லாமிய மத தத்துவம் உறுதியானது. சிலை, சித்திரம் பார்வையை குறுகச் செய்யும். மொழி, தேசப் பற்று இரண்டுக்கும் இது நன்றாகவே பொருந்தும். சில மறுக்கும் முஸ்லிம் சமுதாயம் இறையச்சம், இறைமேலாண்மை, இறைவன் ஆதிக்கம், இறை சடங்குகளில் பின்தங்கவில்லை. மாறாக, அதிகபட்ச மூர்க்கத்துடன், கொள்கை வெறியுடன், சமரசம் பண்ண இயலா தனித்தன்மையுடன் இறைவனை வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. இறைபக்தி என்றால் நேர்மை, எளிமை, தூய்மை வாழ்வியல் விரிவு காணலாம். இறைவனை மறுக்கும், புறக்கணிக்கும் நாத்திகவாதிகள் பகுத்தறிவாதிகள், பொதுவுடைமைவாதிகள் சிலைகளை ஒதுக்குவதில்லை. சற்றேறக் குறைய வழிபாட்டுக்கு இணையாக சிலைகளை போற்றி கொண்டாடுகின்றனர். அறிவின் வீழ்ச்சி, கொள்கை நழுவலாக இதனை கருத வேண்டியுள்ளது. தலைவர் சிலை சேதம் மனித உயிரை பறிக்கிறது. தலைவர் மீதான பின்பற்றுதல், கொள்கை வாரிசுதன்மை எடுபட்டு போய் வெறுப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு இனம், சாதிக்கும் ஒரு தலைவர் சிலை மனித பண்புகளை சிதைக்கிறது. நிரந்தர பகை, சினம், ஆத்திரம், வம்பு, வழக்கு, அடிதடி, கொலைபழி நீடிக்கிறது. மக்கள் வாழும் பகுதி அனுமதி இழக்கிறது. சிலை நிற்கிறது. மனிதம் மடிகிறது.மதம், தேசம், மொழி வளர்ச்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆங்காங்கே சேவையாளர்கள், பெருந் தொண்டர்கள், பேரறிவாளர்கள் தோன்றி பணி செய்கின்றனர். மடிந்து மண்ணுக்குள் புதைகின்றனர். உத்தமர்களின் உபதேசம் மட்டுமே இனி வழிகாட்டி. அவசரகதியில் சிலை வடித்து நகரங்களை, வாழ்விடங்களை, அங்காடி பகுதிகளை ஆக்கிரமிப்பதால் கொள்கை உயரப் போவதில்லை. மாற்றார் மதிக்கப் போவதில்லை. சிலைகள் புனிதமாகி காவல்துறை மக்கள் வரி பணம், மின் ஒளி, விளக்கு அலங்காரம் நாடு முழுக்க கோடி கோடி ரூபாய்களை பாழடிக்கிறது. சமீப காலமாக, மொழி வளர்ச்சியில் அதிகமாக சிலை பங்கேற்கிறது. சென்னையில் உலகத்தமிழ் மாநாடு 1967ல் நடைபெற்றது. உலகின் இரண்டாவது அழகிய கடற்கரையில் பழம்புலவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. தமிழன்னை உருவம் கற்பிக்கப்பட்டது. குமரி முனையில் உயரமான திருவள்ளுவர் சிலை தமிழை ஒருக்காலும் பரப்ப போவதில்லை. சிலைபராமரிப்பு, ஆண்டுக்கு ஒருமுறை சடங்குத்தன மரியாதை மனித நாகரீகத்தை அழுக்காக்கிறது. பல நூற்றாண்டுகள் முன்னர் உயர்வாழ்வு தந்த பெரியோரை யாரும் பார்த்ததில்லை. கற்பனை செய்து உருவம் தந்து சிலை வடிவமைப்பது, சிற்பியை பாராட்டி பொற்கிழி வழங்குவது மன்னிக்க முடியாத வரலாற்று துரோகம். தமிழ் நாட்டில் தமிழ்மொழி சிதைவுக்கு சிலைகள் ஒரு காரணம். சிலை மறுப்பு தமிழ் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சிலை மறுத்தல், ஒழித்தல், ஒதுக்குதல், துடைத்தல் நவீன தமிழகம் காணும் கனவு.
No comments:
Post a Comment